தலையில் கல்லைப்போட்டு கொலையானவர்டீவிற்கும் தொழிலாளி

2பார்த்தது
தலையில் கல்லைப்போட்டு கொலையானவர்டீவிற்கும் தொழிலாளி
திருப்பூர்-அவினாசி ரோடு பங்களா பஸ் நிறுத்தம் அருகே வணிக வளாகம் முன் கடந்த 18-ந் தேதி இரவு, 40 வயது மதிக்கத்தக்க டீ தொழிலாளி வேல்முருகன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டார். திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், கொலை செய்த நபர் வேல்முருகனுக்கு தெரிந்தவர் என தெரியவந்துள்ளது. இருவரும் ஒன்றாக சுற்றித்திரிந்ததால், தெரிந்த நபர்தான் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி