திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஸ் அசோக்கிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: - எனது மூத்த மகள் பிறந்த நாளுக்கு குன்னத்தூரில் உள்ள பேக்கரி ஒன்றில் கேக் வாங்கினேன். பிறந்த நாளன்று மாலை குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடினோம்.
அப்போது அந்த கேக்கை சாப்பிட்ட சில நிமிடங்களில் எங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர் முதல் சிறியவர்கள் வரை வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம். அப்போது குன்னத்தூர் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எங்களிடம் நேரில் விசாரணை நடத்தினர்.
மேலும் அந்த பேக்கரியின் உரிமையாளரும் அவருடைய சகோதரரும் எங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் இழப்பீடு வழங்குவதாக கூறி ரூ. 12 ஆயிரம் கூகுள் பே மூலம் அனுப்பினர்.
தொடர்ந்து சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதை அடுத்து தற்போது பேக்கரியின் உரிமையாளரும் அவருடைய சகோதரரும் சேர்ந்து பேக்கரி பெயரை கெடுக்கும்படி நடந்து கொண்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கின்றனர்.
எனவே எங்களை மிரட்டும் பேக்கரி உரிமையாளர் மற்றும் சகோதரர் மீது நடவடிக்கை எடுத்து பேக்கரிக்கு சீல் வைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.