அறிவித்தபடி விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்

320பார்த்தது
அறிவித்தபடி விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்
திருப்பூர் எம்.பி. சுப்பராயன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விவசாயக் கடன் தள்ளுபடி விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படாதது விவசாயிகளை வருத்தமடையச் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே, 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி