திருப்பூர் மாநகராட்சி குப்பை மேலாண்மையில் செயல்படாததை கண்டித்தும், வாக்காளர் திருத்தப் பணியில் திமுகவினர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகவும் கூறி, பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அதிமுகவினர் திருப்பூர் குமரன் சிலை அருகே 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடக்கழிவு மேலாண்மை திட்டம் இல்லாததால் குப்பைகள் குவிந்துள்ளதாகவும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை திமுகவினர் அச்சுறுத்துவதாகவும் அதிமுகவினர் குற்றம் சாட்டினர்.