அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கை குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கடந்த 3-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர்ந்து 3 நாட்களாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று அவர்கள் தங்களது போராட்ட முறையை மாற்றியுள்ளனர்.