திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 3-ந்தேதி முதல் ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 14-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது.