மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி நியமனம்

503பார்த்தது
மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி நியமனம்
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரியாக இருந்த சந்திரமோகன் மீது எழுந்த புகாரைத் தொடர்ந்து, அவரை கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரியாக மாற்றி மாற்றுத்திறனாளிகள் நல ஆணையாளர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார். இந்த பணியிடமாற்றம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மேலும், காலியாக உள்ள திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி பணியிடத்தில், தாசில்தார் நிலையில் உள்ள ஒருவரை தற்காலிகமாக நியமிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி, திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரியாக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஒருவர் நியமிக்கப்பட உள்ளார்.

தொடர்புடைய செய்தி