தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், கோவை மண்டலத்திற்குட்பட்ட திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், நீலகிரி மாவட்ட ITI பயிற்சி முடித்தவர்களுக்காக, தொழில் பழகுனர் (Apprentice) தேர்வு முகாம் வருகிற 12-ந்தேதி தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. மத்திய, மாநில அரசு மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தேர்வு நடத்துகின்றன. தேர்வானவர்களுக்கு தேசிய தொழில் பழகுனர் சான்றிதழ் மற்றும் உதவித்தொகை வழங்கப்படும். 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தகுதி உள்ளவர்கள் அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம்.