திருப்பூர்: பள்ளிவாசல் ஜமாத்தார் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசை

940பார்த்தது
திருப்பூர் வேலம்பாளையத்தில், மஸ்ஜிதே இக்லாஸ் பள்ளிவாசல் ஜமாத்தார்கள், ஸ்ரீ ஊருடையம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு 11 சில்வர் தட்டுகளில் சீர்வரிசை வழங்கி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தினர். ஊர்வலமாக வந்து கோவில் நிர்வாகத்திடம் சீர்வரிசையை வழங்கிய இந்த நிகழ்வு, அப்பகுதியில் மத நல்லிணக்கத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருப்பூர் மக்களால் பாராட்டப்பட்ட இந்த நிகழ்வில் இருதரப்பினரும் பரஸ்பரம் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி