பனியன் நிறுவனத்தில் ரூ. 55 லட்சம் மோசடி; 2 பேர் கைது

திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வரும் கண்ணன், தனது மனைவியின் தம்பியான மணிகண்டனை நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தியிருந்தார். மணிகண்டன் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ஆர்டர்கள் பெறுவது, மூலப்பொருட்கள் வாங்குவது போன்ற பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில், மணிகண்டன் நிறுவனத்தின் பெயரில் ரூ. 55 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கண்ணன் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
