திருப்பூர்: பனியன் நிறுவன தொழிலாளி போக்சோவில் கைது

83பார்த்தது
திருப்பூர்: பனியன் நிறுவன தொழிலாளி போக்சோவில் கைது
திருப்பூர் செவந்தாம்பாளையம், சிவசக்தி நகரை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 37). இவர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான மகேஸ்வரன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். மகேஸ்வரனின் மனைவி கரூரில் இருக்கும் போதும் தகராறு செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கரூர் போலீசார் விசாரித்து சமீபத்தில் பிரச்சினையை தீர்த்து வைத்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு மீண்டும் திருப்பூர் வந்த மகேஸ்வரன் மதுகுடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார்.

 இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது மதுபோதையில் சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்த மகேஸ்வரன் சிறுமியிடம் அத்துமீறியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாய் மற்றும் சைல்டுலைன் அமைப்பிற்கு தகவல் தெரிவித்துள்ளார். சைல்டுலைன் அமைப்பினர் உதவியுடன் சிறுமி கே.வி.ஆர். நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மகேஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி