திருப்பூர் மாநகராட்சி ஆலங்காடு பகுதியில் இருந்து அணைப்பாளையம் வரை நொய்யல் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள சாலையில், கொட்டி வைக்கப்பட்டிருந்த பனியன் கழிவுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதனால் ஏற்பட்ட கரும்புகை காரணமாக அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.