திருப்பூர்: நண்பரைத் தாக்கிய பனியன் தொழிலாளி கைது

61பார்த்தது
திருப்பூர்: நண்பரைத் தாக்கிய பனியன் தொழிலாளி கைது
திருப்பூர் முத்தணம்பாளையம் வாய்க்கால்மேடு பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன் (45). அவருடைய நண்பர் மணிகண்டன் (40). இருவரும் பனியன் நிறுவன தொழிலாளிகள். நேற்று மணிகண்டன், குபேந்திரனை பலமுறை செல்போனில் அழைத்தார். ஆனால் குபேந்திரன் அழைப்பை ஏற்கவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து குபேந்திரன் முத்தணம்பாளையம் டாஸ்மாக் கடை அருகே சென்றார்.

அப்போது அங்கிருந்த மணிகண்டனிடம், அழைப்பை ஏற்காததை குறித்து குபேந்திரனிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், குபேந்திரனைத் தாக்கினார். 

இதில் காயமடைந்த குபேந்திரன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனைக் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி