வாக்காளர்களுக்கு வழங்க தயார் நிலையில் பூத் சிலிப்புகள்

6பார்த்தது
வாக்காளர்களுக்கு வழங்க தயார் நிலையில் பூத் சிலிப்புகள்
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி விவரங்களை எளிதாக அறிந்து வாக்களிக்கும் வகையில், பூத் சிலிப்புகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் பிரிவு அலுவலர்கள் கணினி மூலம் இவற்றை தயார் செய்து, வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு வினியோகிக்க உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் மொத்தம் 19 லட்சத்து 83 ஆயிரத்து 882 வாக்காளர்கள் உள்ளனர்.
Job Suitcase

Jobs near you