திருப்பூர்: வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

68பார்த்தது
திருப்பூர்: வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
திருப்பூர் முத்தனம்பாளையம் பகவதி அம்மன் நகரை சேர்ந் தவர் பாலசுப்பிரமணியம் (வயது 51). இவர் ராக்கியாபாளை யம் பகுதியில் பால்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாலசுப்பிரமணியம் மற்றும் அவருடைய மனைவியும் பால்க டைக்கு வியாபாரம் பார்க்க வந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப் பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணியம் வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டின் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 85 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது. பாலசுப்பிரமணியமும், அவரதுமனைவியும் பால் கடைக்கு வந்ததை அறிந்த ஆசாமிகள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி