திருப்பூர்: வரத்து அதிகரிப்பால் முட்டைகோஸ் விலை குறைவு

57பார்த்தது
திருப்பூர்: வரத்து அதிகரிப்பால் முட்டைகோஸ் விலை குறைவு
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு சுற்றுவட்டார பகுதி மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகள் அதிக அளவில் உள்ளன. கடந்த சில மாதங்களாக மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது. 

முட்டைகோஸ் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. அதன்படி விற்பனை செய்யப்பட்ட காய்கறிகள் விலை விவரம் பின்வருமாறு: - 15 கிலோ எடை கொண்ட புடலங்காய் கட்டு ரூ. 250, சுரைக்காய் கட்டு ரூ. 150 முதல் ரூ. 300, பீர்க்கங்காய் கட்டு ரூ. 800, 15 கிலோ எடை கொண்ட வெண்டைக்காய் மூட்டை ரூ. 500, மிளகாய் மூட்டை ரூ. 400 முதல் ரூ. 500, கத்தரிக்காய் மூட்டை ரூ. 300 முதல் ரூ. 400, 18 கிலோ எடை கொண்ட தட்டைப்பயிறு மூட்டை ரூ. 400, 20 கிலோ எடை கொண்ட முள்ளங்கி மூட்டை ரூ. 300, பாகற்காய் மூட்டை ரூ. 1,000, 25 கிலோ எடை கொண்ட பீட்ரூட் மூட்டை ரூ. 300 முதல் ரூ. 400, 30 கிலோ எடை கொண்ட பூசணிக்காய் மூட்டை ரூ. 200. முட்டைகோஸ் 40 கிலோ எடை கொண்ட முட்டைகோஸ் ரூ. 250, 15 எண்ணம் கொண்ட காலிபிளவர் மூட்டை ரூ. 200 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி