திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு மருத்துவரிடம் உடல் பரிசோதனை செய்து மாற்றுத்திறனாளிகள் அட்டை பெற்று வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் அட்டை பெற்றவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று(டிச.21) நடைபெற்ற முகாமில் மொத்தம் 49 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். இதில் 38 மாற்றுத்திறனாளிகள் புதிய அட்டைக்கும், 11 மாற்றுத்திறனாளிகள் பழைய அட்டையை புதுப்பிக்கவும் செய்தனர். இந்த தகவலை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி வசந்தராமகுமார் தெரிவித்தார்.