திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், சின்னசாமி அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவனின் பையில் கஞ்சா பிடிபட்டதாகவும், அதனை காவல்துறைக்கு தகவல் அளிக்காமல் பள்ளி வளாகத்திலேயே தலைமை ஆசிரியர் எரித்துவிட்டதாகவும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சகாயமேரி குற்றம்சாட்டினார். இதுகுறித்து கல்வித்துறையிலும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறிய அவர், இன்று மாவட்ட ஆட்சியரிடம் மண்டியிட்டு மனு அளித்தார். மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.