திருப்பூர்: சிறையில் விசாரணை கைதியிடம் சிக்கிய கஞ்சா

52பார்த்தது
திருப்பூர்: சிறையில் விசாரணை கைதியிடம் சிக்கிய கஞ்சா
திருப்பூர் மாவட்ட சிறையில் நேற்று (ஜனவரி 2) கைதிகளிடம் சிறை அதிகாரிகள் வழக்கம் போல் சோதனை செய்தனர். அப்போது கோவை துடியலூரை சேர்ந்த விசாரணை கைதியாக இருந்த சாலமோன் (வயது 27) என்பவரிடம் 45 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவரிடம் எப்படி கஞ்சா வந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மேலும் இது தொடர்பாக வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி