திருப்பூர்: சரமாரியாக கத்தி குத்து; முன்னாள் அதிமுக எம்எல்ஏ உட்பட 6 பேர் மீது வழக்கு

571பார்த்தது
திருப்பூர் டும் லைட் மைதானம் அருகே ஸ்ரீவாரி ஃபைனான்ஸ் என்ற தனியார் நிறுவனம் நடத்தி வருபவர் பிரகாஷ். இவருக்கும் முன்னாள் அதிமுக எம்எல்ஏ குணசேகரனுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் இருந்ததாகவும் 2023ம் ஆண்டு கணக்கு முடித்த நிலையில் மேலும் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என குணசேகரன் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகவும் தனது உறவினர்களான கோவிந்தராஜ் மற்றும் தியாகராஜன் மூலம் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகவும். 

மேலும் குணசேகரன் மூலம் பழக்கமான ராஜேஷ் என்பவரது நிறுவனத்தில் பங்குதாரராக கொடுத்த 13 கோடி ரூபாய் நிலத்தின் ஆவணங்களை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாகவும் இதனால் திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் புதன்கிழமை இரவு ஃபைனான்ஸ் அலுவலகம் வெளியே நின்றிருந்த பிரகாஷை தேடி வந்த ரமேஷ் என்பவர் முன்னாள் எம்எல்ஏ குணசேகரை பகைத்துக் கொண்டு வாழ்ந்து விடுவாயா என கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தி உள்ளார். தடுக்க சென்ற யூசுப், சங்கீத ராஜன், கௌரிசங்கர் என்ற 3 பேரையும் மறைத்து வைத்திருந்த அரிவாள் கொண்டு தாக்கி உள்ளார். இதில் 4 பேருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் ரமேஷை பிடித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயமடைந்த 4 பேரில் 3 பேர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெ
Job Suitcase

Jobs near you