திருப்பூர் ரெயில்வே குட்ஷெட் புதுப்பிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சேலம் மாவட்டம் பன்னப்பட்டியைச் சேர்ந்த பொக்லைன் டிரைவர் சதாசிவத்திடம் (35) நேற்று 4 பேர் செல்போன் மற்றும் ரூ. 300-யைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து சதாசிவம் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணம் பறித்தவர்களைத் தேடி வருகின்றனர்.