சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவர் தேர்வு

5பார்த்தது
சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவர் தேர்வு
சேலம், சங்ககிரி விவேகானந்தா பெண்கள் கல்லூரியில் வியாழக்கிழமை முதல் வரும் 11-ந்தேதி வரை தேசிய ஒருமைப்பாடு முகாம் நடைபெறுகிறது. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், பெரியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து நடத்தும் இந்த முகாமில் 12 மாநிலங்களைச் சேர்ந்த 200 நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்கின்றனர். இதில், பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து 3 மாணவர்கள் மற்றும் 3 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி