சித்திரகுப்தன் வேடமடைந்து விழிப்புணர்வு நாடகம்.

1பார்த்தது
திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில், போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், எமதர்மன் மற்றும் சித்திரகுப்தன் வேடமடைந்து விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. போதைப் பொருட்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், நல்லூர் காவல் சரகத்தின் சார்பில் இந்த நிகழ்ச்சி தாராபுரம் சாலையில் உள்ள கோவில் வழி பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி