கோவை-ஜெய்ப்பூர் வாராந்திர சிறப்பு ரெயில் காலம் நீட்டிப்பு

380பார்த்தது
கோவை-ஜெய்ப்பூர் வாராந்திர சிறப்பு ரெயில் காலம் நீட்டிப்பு
பயணிகளின் தேவை அதிகரிப்பால், கோவை-ஜெய்ப்பூர் இடையே திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை-ஜெய்ப்பூர் (வண்டி எண். 06181) சிறப்பு ரயில், வருகிற 26-ந்தேதி முதல் அடுத்த மாதம் 26-ந்தேதி வரை கோவையில் இருந்து வியாழக்கிழமைகளில் மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு, சனிக்கிழமைகளில் மதியம் 1.25 மணிக்கு ஜெய்ப்பூரை சென்றடையும். இந்த ரயில் திருப்பூருக்கு வியாழக்கிழமைகளில் மதியம் 3.13 மணிக்கு வந்து 3.15 மணிக்கு புறப்படும். இது பயணிகளுக்கு கூடுதல் வசதியை அளிக்கும்.

தொடர்புடைய செய்தி