திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்க ளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மனிஷ் நார ணவரே தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களின் ஓய்வூதி யம் தொடர்பான குறைகள் கேட்டறியப்பட்டது. கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர். ஓய்வூதியம் மற்றும் பெயர் மாற்றம், பிறந்த தேதி உள்ளிட்ட திருத்தங்கள்ஆகியவை 65 முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு மேற்கொள் ளப்பட்டது. 13 முன்னாள் படைவீரர்களுக்கு ஓய்வூதியம் ஒப்ப ளிப்பு ஆணையை கலெக்டர் வழங்கினார். முன்னதாக ஓய் வூதிய சேவை வாகனத்தை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மனிஷ் நாரணவரே தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனர் புஷ்பலதா, பாதுகாப்பு கணக்குகள் துணை கட்டுப்பாட்டாளர் சங்கீதா, கர்னல் ராமகிருஷ்ணன், முன்னாள் படைவீரர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.