திருப்பூரை அடுத்த அவினாசி பகுதியில் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே நேற்று ஆய்வு மேற்கொண்டார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மரக்கன்று நடுதல் உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அவினாசியில் உள்ள திருமண மண்டபத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்ட இயந்திரத்தின் செயல்பாடுகளையும், வேலம்பாளையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மறுசுழற்சி மையத்தின் செயல்பாடுகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.