ஆயத்த ஆடை பூங்காவில் கலெக்டர் ஆய்வு

0பார்த்தது
ஆயத்த ஆடை பூங்காவில் கலெக்டர் ஆய்வு
திருப்பூர் அருகே நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, 100 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவில் முதன்முறையாக தனித்துவமாக செயல்படுகிறது. 2003-ல் தொடங்கப்பட்ட இங்கு 53 பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளன. நவீன இயந்திரங்களுடன் இயங்கும் இந்த பூங்காவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆண்கள், பெண்களுக்கான ஆடைகள் மற்றும் நிட்டிங் ஆடைகளை தயார் செய்கின்றனர். தொழிலாளர்களுக்கான பயிற்சி மையம், கூட்ட அரங்கம், நல வசதிகள், குடிநீர், வடிகால் வசதிகளும் இங்கு உள்ளன.

தொடர்புடைய செய்தி