2 நாட்கள் பொங்கல் கலைவிழா பொதுமக்களுக்கு கலெக்டர் அழைப்பு

3பார்த்தது
2 நாட்கள் பொங்கல் கலைவிழா பொதுமக்களுக்கு கலெக்டர் அழைப்பு
திருப்பூர் பாண்டியன் நகரில் வருகிற 15 மற்றும் 16-ந்தேதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பொங்கல் கலைவிழா நடைபெற உள்ளது. இதில் பரதநாட்டியம், நையாண்டி மேளம், கரகம், காவடி, தப்பாட்டம், மயிலாட்டம், புரவியாட்டம், தெருக்கூத்து நாடகம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. குடும்பத்துடன் கூடி பாரம்பரிய கலைகளை ரசித்து மகிழவும், தமிழர் பண்பாட்டை போற்றி சமூக ஒற்றுமையை வளர்க்கவும் இந்த விழா ஒரு மேடையாக அமையும். பொதுமக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வரவேற்கப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி