திருப்பூர்: அறிவுசார் மையத்தில் ஆணையாளர் ஆய்வு

56பார்த்தது
திருப்பூர்: அறிவுசார் மையத்தில் ஆணையாளர் ஆய்வு
திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்கள் இங்கு உள்ளன. இணையதள வசதி, கணினி அமைக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் இங்கு வந்து போட்டித்தேர்வுக்கு குறிப்பெடுத்து தயாராகி வருகிறார்கள். இந்த மையத்தை மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மகேஸ்வரி ஆய்வு செய்தார். போட்டித்தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர்கள், இளம்பெண்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி