திருப்பூர் மாநகராட்சி நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கையின்போது, விண்ணப்பம் பெறும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் கட்டாய பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஆசிரியர் ஒருவர் பணம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புனிதா அந்தோணியம்மாள், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் எழுத்துப்பூர்வ விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளார். ஆசிரியர்கள் தங்களது விளக்கத்தை முதன்மை கல்வி அதிகாரியிடம் அளித்துள்ளனர்.