மத்திய பாஜக அரசுக்கு கண்டனம்

472பார்த்தது
மத்திய பாஜக அரசுக்கு கண்டனம்
திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அவைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் பிரசாரம் செய்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், தேர்தலில் திருப்பூர் வடக்கு, அவினாசி சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், தேர்தல் பணியாற்றிய தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.