திருப்பூர்: தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்

71பார்த்தது
திருப்பூர்: தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்
அனைத்து விசைத்தறி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மங்கலத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பது குறித்து விசைத்தறி உரிமையாளர்களிடம் கோரிக்கை வைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும் நாளை (திங்கட்கிழமை) திருப்பூர் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, வேலுச்சாமி, குப்புசாமி, எல்.பி.எப். தொழிற்சங்கத்தைச் சேர்ந்த மா. சிவசாமி, ஏ.டி.பி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி