திருப்பூர் மாவட்டத்தில் மிஷன் வாட்சல்யா திட்டத்தின் கீழ், குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் உள்ள 6 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளை வளர்க்க தம்பதியினர் விண்ணப்பிக்கலாம். 6-12 வயது குழந்தைகளை வளர்க்க 35-55 வயதுடையோரும், 12-18 வயது குழந்தைகளை வளர்க்க 35-60 வயதுடையோரும் விண்ணப்பிக்கலாம். குழந்தைகள் நலக்குழுவின் உத்தரவின் பேரில் தற்காலிக அல்லது நீண்டகால வளர்ப்பு வழங்கப்படும் என திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.