அவினாசி: தேங்காய் பறித்தபோது கீழே விழுந்து கிரேன் ஆபரேட்டர் பலி

66பார்த்தது
அவினாசி: தேங்காய் பறித்தபோது கீழே விழுந்து கிரேன் ஆபரேட்டர் பலி
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 33). இவர் திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள பாயிலர் தொழிற்சாலையில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று அவர் தொழிற்சாலை வளாகத்தில் கிரேன் மீது ஏறி தென்னை மரத்தில் தேங்காய் பறித்துக் கொண்டிருந்தார். 

அப்போது கயிறு அறுந்து தவறி விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்குச் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி