திருப்பூர்: சரக்கு வேன் மோதி விபத்து.. பலி

1569பார்த்தது
திருப்பூர்: சரக்கு வேன் மோதி விபத்து.. பலி
சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் பல்லகவுண்டம்பாளையம் அருகே சரக்கு வேன் மோதி யோகேஸ்வரன் (42) என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். விருமாண்டம்பாளையம் ஊராட்சி சின்னகருக்குபாளையம் பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன், செங்கப்பள்ளி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த வேன் மோதியதில் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி