திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, கடந்த 4 ஆண்டுகளாக 13 முறைக்கும் மேல் மனு அளித்தும் இதுவரை பட்டா வழங்கப்படாததால், விழுதுகள் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகம் எதிரே காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். நலச்சங்க மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று, வருகிற வெள்ளிக்கிழமை முதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெறும் என்றும், வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.