மாவட்ட அளவிலான கட்டுரைப்போட்டி: ஈரோடு மாவட்ட அளவில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் செம்மொழி நாள் கட்டுரை போட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்ற நம்பியூர் குமுதா பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி க. மேகவர்ஷினி மாவட்ட அளவில் 2-வது இடம் பிடித்தார். அவருக்கு கலெக்டர் ராஜகோபால்சுந்தரா ரூ. 7 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்.
மேலும் மாணவியை பள்ளித்தாளாளர் கே.ஏ. ஜனகரத்தினம், துணைத்தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், பள்ளியின் செயலர் டாக்டர் அரவிந்தன், இணைச்செயலர் டாக்டர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, பள்ளியின் முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.