திருப்பூரில், 11 வயது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த 46 வயது தொழிலாளிக்கு மாவட்ட மகளிர் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 6-ம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. விசாரணையில், வளர்ப்பு தந்தை பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது.