திருப்பூர்: செயற்கை நீரூற்று போல் வீணாக பாயும் குடிநீர்

70பார்த்தது
திருப்பூர்: செயற்கை நீரூற்று போல் வீணாக பாயும் குடிநீர்
திருப்பூர் -காங்கயம் ரோடு பெரிய தோட்டம் அருகே சங்கிலிப்பள்ளம் ஓடை உள்ளது. இந்த ஓடையின் மேலாக இப்போது குடிநீர் வினியோகத்திற்கான பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாயின் இணைப்பு பகுதியில் சிறிய இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இதிலிருந்து அதிக அளவில் குடிநீர் பீய்ச்சி அடிக்கிறது. 

பார்ப்பதற்கு செயற்கை நீரூற்று போல பாயும் குடிநீர் ஓடைக்குள் வீணாகப் பாய்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக குடிநீர் பாய்ந்து வரும் நிலையில் இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீரின் அளவு குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் யாருக்கும் பயனின்றி வீணாகப் பாயும் நிலையில் எந்தத் தீர்வும் எட்டப்படாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி