திருப்பூர்: மத்திய பஸ் நிலையத்தில் செல்போன் திருடிய டிரைவர் கைது

80பார்த்தது
திருப்பூர்: மத்திய பஸ் நிலையத்தில் செல்போன் திருடிய டிரைவர் கைது
திருப்பூர் தெற்கு போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராமநாதபுரத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன்(வயது 30) என்பதும், அவர் வஞ்சிபாளையம் பகுதியில் தங்கி மினி பஸ் டிரைவராக வேலை செய்ததும் தெரியவந்தது.

 தற்போது அவர் வேலைக்கு செல்லவில்லை. ஜெயச்சந்திரனை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர் மீது ஏற்கனவே அடிதடி வழக்கு உள்ளதும், மத்திய பஸ் நிலையத்தில் குடிபோதையில் இருந்தவரின் செல் போனை திருடி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்

தொடர்புடைய செய்தி