திருப்பூர்: மின்சாரம் தாக்கி டிரைவர் பலி

70பார்த்தது
திருப்பூர்: மின்சாரம் தாக்கி டிரைவர் பலி
மின்சாரம் தாக்கி டிரைவர் பலி திருப்பூர் பிச்சம்பாளையம் புதூரை அடுத்த கணேஷ்நகரை சேர்ந்தவர் வெற்றிகணேசன் (வயது 41). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வெற்றிகணேசன் வீட்டில் குழந்தைகளின் பள்ளிச் சீருடைக்கு ஐரன் பாக்ஸ் மூலம் இஸ்திரி போட்டுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி கணேசன் தூக்கிவீசப்பட்டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கணேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி