திருப்பூர்: கூடுதல் டிஜிபி தலைமையில் போதைப்பொருள் தடுப்பு ஆய்வுக்கூட்டம்

69பார்த்தது
திருப்பூர்: கூடுதல் டிஜிபி தலைமையில் போதைப்பொருள் தடுப்பு ஆய்வுக்கூட்டம்
தமிழக மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அமல்ராஜ் தலைமையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 2023-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை சிறந்த முறையில் போலீசார் பணியாற்றி பல்வேறு குற்றவாளிகளை கைது செய்துள்ளதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

2025-ம் ஆண்டு மே மாதம் வரை போலீசாரின் செயல்பாடுகள், போதைப்பொருள் ஒழிப்பு சிறந்த முறையில் நடைபெற்றுவருவதை பாராட்டினர். போதைப்பொருட்களை ஒழிப்பதில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும். மற்ற போதைப்பொருட்களையும் கட்டுப்படுத்தி கோவை சரகம் போதைப்பொருள்கள் இல்லாத சரகமாக உருவாக்க போலீஸ் அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று கூடுதல் டி.ஜி.பி. அறிவுறுத்தினார். 

இந்த கூட்டத்தில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், கோவை சரக டி.ஐ.ஜி. சசிமோகன், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக், நீலகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், திருப்பூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், கோவை மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கம், ஈரோடு மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி