காங்கயம்: விபத்தில் முதியவர் சாவு

75பார்த்தது
காங்கயம்: விபத்தில் முதியவர் சாவு
காங்கயம் தம்மரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பன் னீர்செல்வம் (வயது 60). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் ஊத்துக்குளி ரெயில் நிலையம் பகுதியில் இருந்து கவுண்டம்பாளையம் நால்ரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் கருமாண்டக்கவுண்டனூர் பகுதியை கடந்து சென்று கொண்டிருந்தபோது சாலையின் வளைவு பகுதியில் இவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த காரின் ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டதாக கூறப்படு கிறது. இதன் காரணமாக இரு சக்கர வாகனத்தை கட்டுப்ப டுத்த முடியாமல் காரின் பின்புறம் பன்னீர்செல்வம் மோதி யுள்ளார். இதில் நிலை தடுமாறிய பன்னீர்செல்வம் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த காரின் மீதும் மோதி தூக்கி வீசப்பட்டு காரின் பின்புறம் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது விழுந்துள்ளார். இதில் பலத்த அடிபட்ட பன்னீர் செல்வத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஊத்துக் குளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கி ருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவம னைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி