முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்4-ந்தேதி

0பார்த்தது
முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்4-ந்தேதி
திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படையில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 4-ந் தேதி மாலை 3.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறை எண். 20-ல் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பத்தை இரட்டை பிரதிகளில் நேரில் சமர்ப்பித்து பயன்பெறலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.