திருப்பூர்: 28-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

1103பார்த்தது
திருப்பூர்: 28-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28-ந் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை தாங்குகிறார். அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கும் இந்த கூட்டத்தில், விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் இருந்து தலா ஒரு பிரதிநிதி தங்கள் கோரிக்கைகளை தொகுத்து தெரிவிக்கலாம்.

தொடர்புடைய செய்தி