ரூ. 90 ஆயிரம் பறித்த சிறுவன் உள்பட 5 பேர் கைது

0பார்த்தது
ரூ. 90 ஆயிரம் பறித்த சிறுவன் உள்பட 5 பேர் கைது
திருப்பூரை அடுத்த முருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி சந்தோஷ் (22), செல்போனில் செயலி பார்த்துக் கொண்டிருந்தபோது, நாகராஜ் என்பவருடன் பேசி, திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு அவரை காரில் ஏற்றி மங்கலம்-சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வழியில் 17 வயது சிறுவன் உட்பட மேலும் 4 பேர் காரில் ஏறியுள்ளனர். பின்னர் 5 பேரும் சேர்ந்து சந்தோஷிடம் இருந்து ரூ.90 ஆயிரத்தை பறித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you