ராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி

209பார்த்தது
ராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவாக மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றது. மாணவ பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். உதவியாளர் சரண்யா முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வீரர்களை நினைவு கூர்ந்து பேசினார். தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்தூவியும் ராணுவ வீரர்களின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவ செயலாளர்கள் ரேவதி, ரூபினா, தினேஷ்குமார், பிரவீன், சுலோச்சனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி