திருப்பூரில் தங்கியிருந்த 50 வயது லாரி ஓட்டுநர், தனது 15 வயது வளர்ப்பு மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததால் தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. மயிலாடுதுறையைச் சேர்ந்த இவர், திருப்பூரில் வசித்து வந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.