திருப்பூர் மாநகராட்சி சார்பில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் 3-வது வார்டுக்குட்பட்ட கூத்தம்பாளையம் பிரிவு, அண்ணாநகரில் உள்ள முருகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பெட்டகத்தையும் வழங்கினார்.
துணை மேயர் எம். கே. எம். பாலசுப்பிரமணியம், மாநகர நல அலுவலர் முருகானந்த், 2-வது மண்டல உதவி கமிஷனர் முருகேசன், 2-வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ், கவுன்சிலர்கள் லோகநாயகி கருப்பசாமி, வி. வி. ஜி. வேலம்மாள் காந்தி, கவிதா நேதாஜிகண்ணன், தி. மு. க. வடக்கு மாநகர செயலாளர் ஈ. தங்கராஜ், பகுதி செயலாளர் ஜோதி, முருகு பள்ளி தாளாளர் பசுபதி உள்பட தி. மு. க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்பநர்கள், மருந்தாளுநர்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு பரிசோதனை, சிகிச்சை அளித்தனர். முகாமில் மொத்தம் 1168 பேர் பயனடைந்தனர்.