திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கலெக்டர் மனிஷ் நாரணவரே முன்னிலை வகிக்க, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்துகொண்டு, 71 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 72 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பில் ஸ்கூட்டர்களை வழங்கினர். மேலும், வனத்துறையின் சார்பில் உலக வன உயிரின தினத்தை முன்னிட்டு சமூக பாதுகாப்பு தலைமை விருது மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.